வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (05/10/2018)

கடைசி தொடர்பு:20:32 (05/10/2018)

இ-சேவை சர்வர் ஹேக் செய்யப்பட்டதா? - திடீர் வதந்தியால் பரபரப்பு!

சென்னையில் அரசு பொது இ-சேவை மையங்கள ஹேக்கர்கள் முடக்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இ-சேவை மையம்

கல்வி, அரசு நலத்திட்டங்கள், ஆதார், விவசாய  உதவிகளைப் பெறுவதற்கான சான்றிதழ்களை, ஒரே இடத்தில் விண்ணப்பித்து ஓரிரு நாள்களில் பெறுவதற்கு, தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களைத் தமிழக அரசு தொடங்கியது. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி அலுவலக வளாகங்களில் பெரும்பாலான இ-சேவை மையங்கள் அமைந்துள்ளன. 

சென்னையில், அரசு பொது இ-சேவை மையங்களில் கடந்த மூன்று நாள்களாகப் பிரச்னை. மாநகராட்சிக்கான சொத்துவரி கட்டச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். முதலில் ஏதோ டெக்னிக்கல் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று மாலை வரை நிலைமை சரியாகவில்லை. இ-சேவை சர்வர்களை நடத்துவது தமிழக அரசின் எல்காட் நிறுவனம். அதுதொடர்பான சர்வரை யாரோ ஹேக் செய்துவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் செய்தி பரவியது. இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, '' சர்வர் ஸ்லோ ஆயிருக்கிறது. காரணம், பராமரிப்பு வேலை நடக்கிறது. வேறு எந்த ஹேக்கும் நடக்கவில்லை '' என்று மறுத்தனர்.  

சரி, பராமரிப்பு வேலையாகவே இருக்கட்டும். அதை ஆரம்பிக்கும் முன் பொதுமக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? எல்லாம் மர்மமாய் இருக்கிறது. இந்த விவகாரம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க