வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (06/10/2018)

கடைசி தொடர்பு:08:28 (06/10/2018)

`கனமழை எதிரொலி’ - பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

கன மழை

தென்மேற்கு வங்கங்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி மிகக் கனமழை இருக்கும் எனப் பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல,  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேனி, நீலகிரியில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காரைக்காலில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.