வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (06/10/2018)

கடைசி தொடர்பு:11:38 (06/10/2018)

`ஸ்கூல்ல போட்டோ எடுக்காதீங்க; நானே சொல்லி அனுப்புறேன்'- வைரலாகும் அஜித்தின் அட்வைஸ் வீடியோ

நடிகர் அஜித் பள்ளி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்றவர்களை, சமாதானம் செய்ய முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

அஜித் வீடியோ

`விஸ்வாசம்’ படத்தின் அப்டேட்ஸ்க்காக அஜித் ரசிகர்கள் பயங்கர வெயிட்டிங். எதிர்பார்ப்பிலிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தான் இப்போ ட்ரெண்டிங். பணிச்சூழல் அதிகமிருந்தாலும், அதற்கிடையே குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குபவர் அஜித். அந்த வகையில் தன் மகள் பள்ளிக்குச் சென்றுள்ள அஜித், அங்குள்ள ஊழியர்களிடையே உரையாடிய வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளனர். சில விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ செம வைரலாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பள்ளி வளாகத்தில் நடிகர் அஜித் நடந்து வருகிறார். அவரைக் கண்ட ஊழியர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். அப்போது அவர்களிடம் பேசும் அஜித், ``ஸ்கூலில் போட்டோ எடுக்க கூடாதுங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. நம்ம இன்னொரு நாள் எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமிரா மட்டும் ஆஃப் பண்ணுங்க. வள்ளி மேடம் ரெக்வஸ்ட் பண்ணிருக்காங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்கெல்லாம் ஸ்டாஃபா? நன்றி!” என்று கூறியபடி விடைபெறுகிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.