வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (06/10/2018)

கடைசி தொடர்பு:12:45 (06/10/2018)

திடீர் தீ விபத்தால் பயணிகள் அவதி! 3 மணி நேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில் நிலையம்

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அரியலூர் ரயில் நிலையம் மூன்று மணிநேரம் இருளில் மூழ்கியது. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் தீ விபத்தால் பயணிகள் அவதி! 3 மணி நேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில் நிலையம்

அரியலூரில் உள்ள ரயில் நிலையம் சென்னை - திருச்சி மார்க்கத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் ரயில் நிலையத்தில் 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளுக்கு இடையே உள்ள சுத்தம் செய்யும் பொருள்கள் வைக்கும் அறையில் தீ எரிய ஆரம்பித்தது.

இருளில் மூழ்கிய அரியலூர் ரயில் நிலையம்

அதில் வைக்கப்பட்ட பொருள்கள் முழுவதும் எரிந்து கரும் புகை சூழ்ந்தது. இதையடுத்து, நிலைய மேலாளர் அரியலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை போராடி அணைத்தனர். இச்சம்பவத்தால் மூன்று மணிநேரம் ரயில் நிலையம் இருளில் மூழ்கியது. இதனால் ரயிலில் வந்த பயணிகள் மற்றும் பயணம் செய்யவந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மின்கசிவு ஏற்படுவதற்கு என்னகாரணம் வேறு யாரும் அசம்பாவிதம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு செய்தார்களா என விசாரித்து வருகின்றனர்.