வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:59 (06/10/2018)

`தயார் நிலையில் உள்ளோம்!'- மதுரை வந்தது பேரிடர் மீட்புக் குழு

``எந்த நேரத்திலும் மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளோம்'' என  பேரிடர் மீட்புக் குழுத் தலைவர் ராம் சந்திர கெளலா தெரிவித்தார்.

மதுரை வந்தது பேரிடர் மீட்புக் குழு

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், நாளை (7-ம் தேதி) சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் 24 செ.மீட்டரைவிட அதிகம் மழை இருக்கும் எனவும் 6-ம் தேதி அந்தப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொறுப்பாளர்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். எனவே ரெட் அலர்ட் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என  வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அறிவுறுத்தல் செய்திருந்த நிலையில், மதுரைக்கு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு வந்தடைந்தது. 25 பேர் கொண்ட இந்தக் குழு மதுரை 6-வது சிறப்பு காவல் பட்டாலியன் முகாமில் முகாமிட்டுள்ளனர். வெள்ளப் பேரிடர் ஏற்பட்டால் மீட்பதற்கான அனைத்துவித உபகரணங்களுடன் எந்த நேரத்திலும் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி  அண்டை மாவட்டங்களிலும் மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளது'' என்று கூறினார்.