வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (06/10/2018)

கடைசி தொடர்பு:20:44 (06/10/2018)

'காமெடி மன்னர் தினகரன்!' - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிண்டல்

`தினகரன் நிறைய காமெடி பண்ணுவார்' என்று அமைச்சர் வேலுமணி கோவையில் கூறியுள்ளார்.

வேலுமணி

"பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு சந்தித்தார்; கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் இருக்கும்போது வீரமணி, வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். பிறகு, நான் ஆளுநரிடம் மனு அளிக்கும்போது, என்னைத் துணை முதல்வராக்க வேண்டும் எனக் கூறியவர்களில் ஒருவர்தான் தங்கமணி" என்று தினகரன் கூறியுள்ள கருத்துகள், தமிழக அரசியலில் மீண்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, “துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக ஆளுநர் கூறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மழை பாதிப்புகளைத் தடுக்க முதல்வர்  சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். தினகரன் நிறைய காமெடி பண்ணுவார். நானும் தங்கமணியும்தான், டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து  விலகக் கோரினோம்.

திருப்பரங்குன்றம் தேர்தலில் எங்களுக்கு 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி உறுதியானதால், டி.டி.வி. தினகரன் இவ்வாறு பேசி வருகிறார். ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ், அண்ணன் தம்பி போல ஒன்றாகக் கட்சியை வழிநடத்துகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை வைத்து வெற்றிபெற்றதுபோல திருப்பரங்குன்றத்தில் செல்லுபடி ஆகாது” என்றார்.