வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:42 (06/10/2018)

'அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும்!' - கனமழை எச்சரிக்கையால் கிரண் பேடி உத்தரவு

``கனமழை எச்சரிக்கையால், அரசு ஊழியர்கள் 24 நேரம் பணியில் இருக்க வேண்டும்'' என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

ஆளுநர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த மூன்று நாள்களாக புதுச்சேரியில் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று காலை பேரிடர் மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் தாழ்வான பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கனமழை எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருப்பதால், இன்று முதல் அரசு  ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல், அடுத்த 24 மணி நேரத்துக்கு பணியில் இருக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். மழையால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்கு 186 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழை தொடர்பாக இதுவரை 26 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்கிறது. பொதுமக்கள், பிளாஸ்டிக் குப்பைகளைக் கழிவுநீர்க் கால்வாய்களில் போட வேண்டாம்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க