வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:08:08 (08/10/2018)

`30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்கவேண்டும்' - கமல்ஹாசன்

தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி கிடையாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், `என் கொடியும், நானும் பரபரப்பதும், பறப்பதும் மக்களுக்காகத்தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை. எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதை ஏன் செய்யாமல் இருக்கிறேன் என்ற குற்ற உணர்வினால் நான் அரசியலுக்கு வந்தேன்.

நான்,  30 வருடங்களுக்கு முன்னாள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவ்வாறு வந்திருந்தால் எனக்கு அரசியலில் 25 வயது ஆகியிருக்கும். இப்போது நான் அரசியலில் 8 மாதக் குழந்தையாக நின்றுகொண்டிருக்கிறேன். என்னை சிறுபிள்ளையென்று நினைத்துவிடாதீர்கள். வேட்டையாடி விளையாடுவது என்னுடைய வேலை. தமிழகத்துக்கு என்று தனித்துவம் உள்ளது. தமிழ் மரபணுவை மாற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி இல்லை' என்று தெரிவித்தார்.