வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (07/10/2018)

கடைசி தொடர்பு:12:07 (08/10/2018)

`சொத்தில் பங்கு தரலைனா எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்' - வெற்றிவேல் அதிரடி!

``அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்கள். அவர்களில் எம்.பி ஒருவரின் அப்பாவும் பிரபல அரசியல் வி.ஐ.பிதான். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு, சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால், அந்தத் தாய் நிர்கதியாக நிற்கிறார். தாய்க்கு சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தபட்ட எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்'' என்று வெற்றிவேல் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

வெற்றிவேல்


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சற்றுமுன் பேட்டி அளித்தார். அதில்,`அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு எம்.பி-யின் அப்பாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால் அந்தத் தாய் நிர்கதியாக நிற்கிறார். தாய்க்கு சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தபட்ட எம்.பி-யின் அப்பா பெயரை பகிரங்கமாக வெளியிடுவேன்'' என்று பேசினார்.

இதையடுத்து, அந்த எம்.பி யார் என்று அறிய, வெற்றிவேலை நாம் தொடர்பு கொண்டோம். அப்போது, தென் மாவட்ட எம்.பி ஒருவருடைய பெயரைச் சொல்லி இவரா எனக் கேட்டோம். ஆனால் வெற்றிவேல், சிரித்தபடி,``அவரில்லை.  நான் கூறும் நபர் வேறு. அவர் செய்வது  அநியாயம்'' என்று தெரிவித்தார். விடாமல் தினகரன் தரப்பினரை நாம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் `ஆளும்கட்சி தொடர்பாக தொலைக்காட்சிகளில் தினசரி தோன்றும் வி.ஐ.பிதான் அவர்’ என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க