வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (08/10/2018)

கடைசி தொடர்பு:10:33 (08/10/2018)

பேரிடர் மீட்புப் பணிக்காக தனிக் கட்டுப்பாட்டு அறை - தூத்துக்குடி எஸ்.பி., முரளி ரம்பா தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், அவர்களை மீட்கும் வகையிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பேரிடர்கால மீட்புப் பணிக்கென தனியாக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

murali ramba s.p

இதுகுறித்து எஸ்.பி., முரளி ரம்பா பேசுகையில், ``மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை தனியாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது 24 மணிநேரமும் இயங்கும். இதற்காக 3 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 6 காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மழை நேரத்தில் வீடு, ஓடை, குளம் சேதமடைதல், பொதுமக்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பது, கால்நடைகள் சிக்கித் தவிப்பது இது போன்ற எவ்வித பாதிப்புகள் இருந்தாலும் பொதுமக்கள் 0461-2341 248 என்ற காவல் பேரிடர்கால மீட்புப்பணி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல, மாவட்டத்தில் ஏற்கெனவே, கடந்த 5 -ம் தேதி முதல் ``ஹலோ போலீஸ்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, இந்த அமைப்பின் 95141 44100 என்ற செல்போன் எண் மூலம் பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 441 தொலைபேசி அழைப்புகள் வரப்பெற்று உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கென தனியாகப் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 20 காவல் ஆணையர்கள் என மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படையினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகரம், ஊரகம், மணியாச்சி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய அனைத்து உட்கோட்டங்களில் அந்தந்த உதவிக் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 2 மீட்புக் குழுவினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் எவ்வித பாதிப்பாக இருந்தாலும், மாவட்டக் காவல் துறையின் வெள்ளமீட்புக் கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் ஹலோ போலீஸ் அமைப்பின் செல்போன் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.” என்றார்.           

நீங்க எப்படி பீல் பண்றீங்க