வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (08/10/2018)

கடைசி தொடர்பு:12:40 (08/10/2018)

`வின் பண்ணுவேன்னு எதிர்பார்க்கல!' `மிஸஸ் இந்தியா வேர்ல்டு' கவண் பிரியதர்ஷினி நெகிழ்ச்சி

`கவண்' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர், பிரியதர்ஷினி ராஜ்குமார். இவருடைய நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் சில விளம்பரங்களில் மாடலாகவும் நடித்திருக்கிறார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற `Dazzle Mrs India World Classic 2018' போட்டியில் பங்கேற்று, பட்டத்தைத் தட்டியுள்ளார்.

பிரியதர்ஷினி

இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``நான் `saraswathi Educational cultural and Charitable Trust'-ல் செயலாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருக்கிறேன். பலருக்கும் என்னால் முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு இருக்கேன். கஷ்டப்பட்ட குழந்தைகளுடைய படிப்புக்காகப் பணம் திரட்டி அவங்களுக்கு உதவி பண்றேன். ``Iris glam" கோர்ஸ் படிச்சேன். அங்கேதான் இந்தப் போட்டி பற்றித் தெரிஞ்சது. ஆரம்பத்துல ரொம்பவே தயங்கினேன் அதுக்கப்புறம், சரி முயன்று பார்க்கலாம்னுதான் போனேன். ஏன்னா, அந்தப் பட்டத்தை வின் பண்ணா அதன் மூலமா பலருக்கும் உதவ முடியும். பல என்ஜிஓக்களுடன் இணைந்து செயல்பட முடியும். அதனாலதான் முக்கியமா அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்னு நினைச்சேன். ஒவ்வொரு சுற்றிலும் தேர்வாகி அடுத்தகட்டத்துக்குப் போக ஆரம்பிச்சதும், எனக்குள்ளே நம்பிக்கையும் உற்சாகமும் கூடிச்சு. என்னோடு நிறைய பேர் அந்தப் போட்டியில் கலந்துக்கிட்டாங்க. டைட்டில் வின் பண்ணுவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அந்த டைட்டிலை வாங்கினப்போ அவ்வளவு பெருமையா இருந்துச்சு. இனிமே கண்டிப்பா பலருக்கும் என்னால உதவ முடியும். இந்த டைட்டில் அதுக்கு முக்கியமா உதவி பண்ணும்னு நம்புறேன்.

எனக்காக சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றி. முக்கியமா, நிகழ்ச்சி ஆரம்பிச்சது முதல் முடியுற வரை, `உன்னால முடியும்' என ஊக்கப்படுத்திட்டே இருந்த என் கணவருக்குப் பேரன்பும் முத்தங்களும்'' எனச் சிலிர்க்கிறார், `மிஸஸ் இந்தியா வேர்ல்டு' பிரியதர்ஷினி.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க