வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (08/10/2018)

கடைசி தொடர்பு:14:13 (09/10/2018)

 பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்த 15 கோரிக்கைகள் என்னென்ன?

பிரமதர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டெல்லியில்  பிரதமர் மோடியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தியுள்ளார். 


1. அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் தமிழக அமைச்சரவை ஒருமனதாக பரிந்துரை செய்த பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

2. எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டை என்றென்றும் நினைவும்கூரும் விதமாக அமைச்சரவை பரிந்துரையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயரிடக் கேட்டுக்கொள்கிறேன். 

 3. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க கேட்டுக்கொள்கிறேன். 

4. மதுரை தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க கேட்டுக்கொள்கிறேன். 

5. சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் சுமார் 4,445 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் 

6. 2017-18-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையான 5,426 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்

7. தமிழகத்தின் உரிமை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்க திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

8.  17,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்துக்கு உரிய அனுமதியும் நிதியும் வழங்க வேண்டும். 

9. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும் உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்கிடவும் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் 

10. புயலினால் காணாமல் போகும் மீனவர்களைத் தேடி மீட்டுவர எதுவாக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய ஒரு புதிய நிரந்தரக் கப்பல் படை தளம் அமைக்க வேண்டும்.

 11. தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் வர வேண்டிய 8,699 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்குத் தொகையை உடனே வழங்க வேண்டும். 

 12. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் 

 13. சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி நிலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க ஆவண செய்ய வேண்டும்

14. ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்துக்கு விமானப் போக்குவரத்து சேவையை உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும் 

 15. தென்னை கொப்புரைக்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ற வகையில் கிலோவுக்கு 75 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட வேண்டும் ஆகிய 15 கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்.