வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:04 (08/10/2018)

`அவகாசம் தரமுடியாது!’ - சிலைக் கடத்தல் விவகாரத்தில் ரன்வீர் ஷா உட்பட 7 பேருக்கு சம்மன்

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள  பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் தொழிற்சாலையில் வேலை செய்யும் 7 பேருக்கு சம்மன் அனுப்புயிள்ளனர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்.


சிலைக் கடத்தல்  ரன்வீர்ஷா

சென்னை போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவ் வீட்டில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்தபோது இருபத்து மூன்று சிலைகளை மண்ணுக்கடியில் இருந்து மீட்டனர். தமிழகத்தில் மட்டும் மூன்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகளை நடத்திவருகிறார் கிரண்ராவ். இவர் சிலைக் கடத்தல் வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ரன்வீர் ஷாவின் தோழியாவார்.  ரன்வீர் ஷாவை நாளை கும்பகோணத்தில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நேரில் ஆஜராவதற்கு ரன்வீர் ஷா தரப்பு அவகாசம் கேட்டிருந்த நிலையில், அந்த மனுவையும் நிராகரித்து, நேரில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது போலீஸ்தரப்பு. இதோடு, கிரண்ராவ் தொழிற்சாலையின் இயக்குநர் கதிரவன் உட்பட ஏழு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்டிருக்கும் இருநூறுக்கும் அதிகமான சிலைகள், கிண்டி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் நாளை கும்பகோணம் எடுத்துச் செல்ல இருக்கிறார்கள் அதிகாரிகள்.