வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:05 (08/10/2018)

ஒருமுறை கடத்தினால் ஒரு லட்ச ரூபாய்! - திரவ போதைப் பொருளால் சிக்கிய பெண்

ட்டு கோடி ரூபாய் மதிப்பிலான கேஸிஸ் போதைப் பொருளைக் கடத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர், பாலக்காட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் கேஸிஸ் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய இளம் பெண்ணின் பையில் 2 கிலோ கேஸிஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் கன்னியாகுமரி மாவட்டம் ஆழ்வார்கோவிலைச் சேர்ந்த சிந்துஜா (21) எனவும் இதுவரை 17 முறை கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சூர் சாவக்காட்டைச் சேர்ந்த ஜாபீர் என்பவருக்காக இந்தப் போதைப் பொருளை கடத்துவதாகவும், ஒருமுறை கடத்தினால் ஒரு லட்சம் ரூபாய் கிடைப்பதாகவும் சிந்துஜா தெரிவித்தார். கேரளத்தில் இருந்து ஓமன் நாட்டுக்கு இந்தப் போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

`ஆயில் வடிவில் உள்ள இந்தப் போதைப் பொருளின் மதிப்பு 8 கோடி ரூபாய் இருக்கும்; என மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ராஜூ தெரிவித்தார். 70 கிலோ கஞ்சாவில் இருந்து இரண்டு கிலோ கேஸிஸ் போதைப் பொருள் தயாரிக்கமுடியும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.