ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் - நக்கீரன் கோபால் திடீர் கைது! | nakkheeran Gopal arrested in Chennai airport

வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (09/10/2018)

கடைசி தொடர்பு:10:05 (09/10/2018)

ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் - நக்கீரன் கோபால் திடீர் கைது!

 நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கோபால்

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீஸார், அவரை விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்துள்ளனர். தமிழக ஆளுநரின் துணை செயலர் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்குக் கட்டாயப்படுத்திய வழக்கில், அக்கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி, கடந்த சில மாதங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானதால், அந்த இதழின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என நக்கீரன் பத்திரிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.