வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:00 (09/10/2018)

``அதிகாரபூர்வமற்ற நெருக்கடி நிலை..!’’ - கி.வீரமணி ஆவேசம்


கி.வீரமணி


``நடக்கின்ற நடவடிக்கைகளைப் பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா? பத்திரிகையாளர்களையும், கருத்துக் கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்படாதவையாகும். அண்ணா, பெயரில் உள்ள ஆட் சிக்கு இது அழகல்ல. நக்கீரன் கோபால், வைகோ ஆகியோரை  உடனே விடுதலை செய்ய வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், `` நக்கீரன் ஆசிரியர் கோபால், புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத்துக்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. நக்கீரன் கோபாலின் கைதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்தார். வழக்குரைஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நடக்கின்ற நடவடிக்கைகளைப் பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா. பத்திரிகையாளர்களையும், கருத்துக் கூறக்கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்படாதவையாகும். இத்தகு செயல்பாடுகள், அரசின்மீது பொதுமக்களிடத்தில் கடுமையான அதிருப்தி ஏற்படும் என்பதைக்கூடக் கணக்கில் கொள்ளவில்லையா. ஒருக் கால் இதற்குமேல் புதிதாக அதிருப்தி கொள்வதற்கு என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு அ.தி.மு.க அரசு வந்துவிட்டதா? அண்ணா பெயரில் உள்ள ஆட் சிக்கு இது அழகல்ல. கைதுசெய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க