வெளியிடப்பட்ட நேரம்: 16:13 (09/10/2018)

கடைசி தொடர்பு:16:13 (09/10/2018)

`சட்டப்பிரிவு 124 சொல்வது என்ன?’ - நக்கீரன் கோபால் வழக்கு விவரம்

நக்கீரன் கோபால்

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்துவதை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் நாமக்கலில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை தி.மு.க-வினர் நடத்தினர். அப்போது, ஆளுநர் மாளிகையிலிருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. அதில், ``மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) 124-வது பிரிவின் கீழ் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்'' என்று ஆளுநர் மாளிகை எச்சரித்து இருந்தது.

ஐ.பி.சி 124

அப்போது, ஆளுநர் மாளிகை அறிவிப்பின்படியே இப்போது, தமிழக போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, ஐ.பி.சி பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-ல், ``ஜனாதிபதி / ஆளுநரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இந்தப் பிரிவில் மட்டும் ஒரு பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று சொல்கிறார்கள். அவதூறு வழக்கு தொடராமல் 124-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க