வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (09/10/2018)

விளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்! மதுரையில் அதிர்ச்சி

பெற்ற தாயே குழந்தையைக் கழுத்து அறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

விளையாடிக்கொண்டிருந்த மகளை கழுத்தறுத்துக்கொன்ற தாய்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செந்தில்குமார் -முத்துமாரி தம்பதி வசித்துவருகின்றனர். இவர்களின் 3 வயது மகள் விசாகா இன்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தாய் முத்துமாரி திடீரென விசாகாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார். பின் தன் கையையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர், முத்துமாரியை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 

உயிரிழந்த குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்த முத்துமாரி மனநலம் பாதிக்கபட்டவர் என்று கூறப்படுகிறது. முத்துமாரி பல ஆண்டுகளாக மனநலம் தொடர்பான சிகிச்சை பெற்றுவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். முத்துமாரி மனநலம் பாதிக்கப்பட்டவரா, இல்லை திட்டமிட்டு கொலை செய்தாரா, இல்லை வேறு எதுவும் குடும்பத் தகராறு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். பெற்ற மகளையே தாய் கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.