வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (10/10/2018)

கடைசி தொடர்பு:12:30 (10/10/2018)

''கல்லறையில் கேக் வெட்டணும், புது டிரெஸ் வாங்கியிருக்கோம்'' - கண்ணீரில் ஸ்னோலின் அம்மா

2018 மே 22... மறக்கமுடியாத நாள். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் தன் உயிரை நீத்தவர்களில் ஒருவர், ஸ்னோலின். இன்று அவருக்கு 19-வது பிறந்தநாள். சென்ற பிறந்தநாளில் பல கனவுகளைச் சுமந்திருந்தவள், இன்று இல்லை. அந்தத் தேவதையின் அம்மா வனிதாவிடம் பேசினோம்.

ஸ்னோலின்

''போன வருஷம், ஸ்னோலின் பிறந்தநாளுக்கு வீடே கலகலன்னு இருந்துச்சு. ராத்திரி 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினோம். அவள் ஃப்ரெண்ட்ஸுக்கு ட்ரீட் வெச்சதா சொல்லிட்டிருந்தா. அவளுக்கு ஃப்ரைடு ரைஸ்னா உசுரு. ஃப்ரைடு ரைஸும் பெரிய சாக்லேட்டும் என் புள்ளைக்கு வாங்கிக் கொடுத்தேன்மா. அதுதான் என் புள்ளை கொண்டாடப்போகும் கடைசி பிறந்தநாள்னு அன்னைக்குத் தெரியாம போச்சும்மா. என் மகள் நினைப்பிலிருந்து என்னால வெளியில வரவே முடியலைம்மா. வாழவேண்டிய பொண்ணைப் பறிகொடுத்துட்டு உட்கார்ந்திருக்கேனே'' என அழ ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர், ''இந்த வருஷமும் அவள் பிறந்தநாளைக் கொண்டாடுறோம். கேக் வாங்கிட்டு வந்திருக்கோம். சர்ச்ல வெட்டிட்டு, சாயந்தரம் கல்லறைக்குப் போய் அங்கேயும் கேக் வெட்டப்போறோம். அவள் நினைவா ரெண்டு புள்ளைகளுக்கு டிரெஸ் எடுத்துக்கொடுத்திருக்கேன். போன வருஷம், அவளோடு சந்தோஷமா கொண்டாடிய பிறந்தநாளை, இந்த வருஷம் கல்லறையில கொண்டாடும்படி ஆகிடுச்சு. ஆமா, உனக்கு எப்படி அம்மை ஸ்னோ பிறந்தநாள் தெரியும்?'' எனக் கேட்டார். 

ஸ்னோலின்

''உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ நீங்க சொன்ன தேதியைக் குறிச்சுக்கிட்டேம்மா'' என்றதும், ''சந்தோஷம் கண்ணு.... நீயும் என் புள்ளை மாதிரிதான்'' என அன்பில் திளைக்கவைத்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க