வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (10/10/2018)

கடைசி தொடர்பு:15:08 (10/10/2018)

6 மாத பராமரிப்புச் செலவு ரூ.2.12 லட்சம்! வெள்ளைப்புலி அனுவைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

2006 ம் ஆண்டு டெல்லி உயிரியல் பூங்காவிலிருந்து அனு என்கிற வெள்ளைப்  புலி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டது. அனு இதுவரை வண்டலூரில் 4 முறை குட்டிகளை ஈன்றுள்ளது. கடைசியாக 2014 மே மாதம், பீஷ்மர் என்ற ஆண் வெள்ளைப் புலிக்கும், அனு வெள்ளைப் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.

வெள்ளை புலி

அதில் ஓர் ஆணும், இரண்டு பெண்ணும் அடங்கும். அவற்றுக்கு தாரா, மீரா, பீமா எனப் பெயரிடப்பட்டது. தற்போது 14 வயதான அனு வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். அனு வெள்ளிப்புலியின் ஒரு நாள் பராமரிப்புச் செலவு 1196 ரூபாய். அடுத்த 6 மாதங்களுக்கான வெள்ளைப்புலி அனுவின் செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி ரூபாய் 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேற்று பூங்கா நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். 

வண்டலூர் பூங்காவில் 3 ஆண் வெள்ளைப் புலிகள், 6 பெண் வெள்ளைப் புலிகள் என மொத்தம் 9 வெள்ளைப் புலிகள் இருக்கின்றன. புலி சிங்கம் என இரண்டு விலங்குகளுக்கும் ஒரு நாள் பராமரிப்புச் செலவாக 1196 ரூபாய் ஆகிறது. புலி மட்டுமல்லாது வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள எந்த உயிரினத்தை வேண்டுமானாலும் பொது மக்கள் தத்தெடுக்கலாம். இந்தத் திட்டத்தை 2009 ம் ஆண்டு பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.