வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (11/10/2018)

கடைசி தொடர்பு:11:28 (13/10/2018)

`உலக அரங்கில் ஜொலித்த பரதம்..!’ - ருக்மிணிக்கு மரியாதை கொடுத்த நெதர்லாந்து

யக்குநர் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படத்தில், காற்றில் பறந்து பறந்து பரதமும் பாலேவும் ஆடிய அந்தச் சுருள்முடிப் பெண் ருக்மிணியை நினைவிருக்கிறதா? அடுத்து, 'ஆனந்த தாண்டவம்' என்கிற படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணாக நடித்தார். அந்தப் படத்திலும், 'கனாக் காண்கிறேன் கனாக் காண்கிறேன் கண்ணா' என்று பரதத்தில் அசத்தியிருப்பார். 

ருக்மிணி

ஹைதராபாத்தில் வசித்துவரும் ருக்மிணி, உலகம் முழுக்க நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். லண்டன், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பரதநாட்டியம் வொர்க் ‌ஷாப் நடத்திவருகிறார். உலகம் முழுக்க வலம்வந்துகொண்டிருப்பதால், அவருடைய மொபைலும் அவர் அம்மாவிடம்தான் இருக்கிறது. அம்மா ஜெயலஷ்மியிடம் பேசினோம்.

பாலே டான்ஸ்

Pic Courtesy - Instagram

''நெதர்லாந்தின் 'கார்சோ டான்ஸ் தியேட்டர்' என்ற அரங்கில், உலகின் தலைசிறந்த டான்சர்ஸ் மட்டுமே நிகழ்ச்சி நடத்தமுடியும். சென்ற வருடம், ருக்மிணி அங்கே நடனமாடினாள். பரதநாட்டியத்தையும் பாலே டான்ஸையும் கலந்து, 'மாடர்ன் டான்ஸ்' என்று சொந்தமாக கொரியோகிராஃபி செய்து நடனமாடியிருந்தாள். ருக்மிணியின் திறமையைப் பார்த்து வியந்து, இந்த வருடமும் கார்சோ டான்ஸ் தியேட்டரில் நடனமாட அழைத்துள்ளார்கள்.  தற்போது, லண்டனில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தச் சென்றிருக்கும் ருக்மிணி, அக்டோபர் மூன்றாவது வாரம் நெதர்லாந்துக்குச் சென்று அந்த விருதைப் பெறுவார்'' என்ற தாயின் குரலில் 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்' பேரானந்தம் தெரிகிறது. 

கார்சோ டான்ஸ் தியேட்டரில், இந்த வருடம் நம் நாட்டின் பாரம்பர்ய நடனமான பரதநாட்டியம் பற்றி ருக்மிணி உரையாற்றப்போகிறார் என்பது சிறப்புத் தகவல்.