வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (11/10/2018)

கடைசி தொடர்பு:14:35 (11/10/2018)

``ஓவியங்களை விற்க மனசில்லாம வீட்டில் வைத்து ரசிக்கிறோம்!" - நடிகை சீதா

சீதா

டிகை சீதா, ஃப்ளவர் மேக்கிங் மற்றும் ஓவியம் வரைவதில் அதிக கவனம் செலுத்துகிறார். அந்த அனுபவம் குறித்து கூறுகையில்...

``என்னோட பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரே, பெயின்டிங்தான். என் அம்மாவிடமிருந்து எனக்கும், என்னிடமிருந்து என் மூத்த பொண்ணு அபிநயாவுக்கும் தஞ்சாவூர் பெயின்டிங் பரவியிருக்கு. மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து அடிக்கடி பெயின்ட்டிங் பண்ணுவோம். செலக்டிவா எங்க பெயின்ட்டிங்கை விற்பனை செய்றோம். மற்றபடி, ஆசையா வரைஞ்சதை விற்க மனசில்லாமல், எங்க வீட்டிலயே நிறைய ஓவியங்களை வைத்து ரசிக்கிறோம். எங்க வீட்டுல பூஜை அறையில் உள்ள கடவுள் ஓவியங்கள் அனைத்தும் நான் வரைந்தவையே.

சீதா

தவிர, ஃப்ளவர் மேக்கிங், பலதரப்பட்ட கேண்டில்ஸ், இன்டோர் பிளான்ட்ஸ், போட்டோ ஃப்ரேம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துறோம். இந்தத் தயாரிப்புகள் எங்க வீட்டை அழகுபடுத்துகின்றன. எங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் பரிசாகவும் கொடுத்து மகிழ்கிறோம். ஷூட்டிங் இல்லாதபோது, பெயின்ட்டிங் மற்றும் ஃப்ளவர் மேக்கிங் செயல்பாடுகளில்தான் பெரும்பாலும் கவனம் செலுத்துறேன்" என்கிறார் நடிகை சீதா.