வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:22:00 (11/10/2018)

குமரியை மிரட்டும் மர்மக் காய்ச்சல் - விடுதியில் தங்கியிருந்த ப்ளஸ் ஒன் மாணவி பலி!

மர்மக் காய்ச்சல் காரணமாகக் கடந்த வாரம் ஒரு பெண் இறந்த நிலையில், தனியார் விடுதியில் தங்கிப் படித்துவந்த ப்ளஸ் ஒன் மாணவி இன்று இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனிட்டா

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜெயதாஸ் என்பவரின் மகள் அனிட்டா (16). இவரின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால் நாகர்கோவிலில் ஒரு தனியார் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். நாகர்கோவில் டதி மகளிர் மேனிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவந்த அனிட்டாவுக்கு கடந்த 3 நாள்களாகக் காய்ச்சல் இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு காய்ச்சல் அதிகரித்ததால் மயங்கிவிட்டார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். இதுகுறித்து நேசமணிநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தக்கலையை சேர்ந்த ஜெபசிலின் ஜெனிஷா (29) என்பவர் மர்மக் காய்ச்சலால் கடந்த வாரம் இறந்தார். இந்த நிலையில் பள்ளி மாணவி இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க