வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/10/2018)

கடைசி தொடர்பு:08:30 (12/10/2018)

கீழடி ஆய்வில் 3000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன - தொல்லியல் துறை அறிக்கை!

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை அக்டோபர் 31ல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கீழடி ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. அப்போது தங்கம், பாரசீக பாசி குறியீடு ஓடுகள், கழிவுநீர்க் கால்வாய்கள், தொழிற்கூடம் போன்ற எச்சங்கள், கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கிடைக்கப்பெற்ற பொருள்கள் ஆய்வுக்காக பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டன. மேலும், ஒவ்வொரு ஆய்வும் பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடிகளுக்குப் பிறகே நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசு நான்காவது ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்கான காலம், செப்டம்பர் மாதம் முடிவடைந்துவிட்டது அதன் அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது.


அதில் 3000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்திருப்பதாகவும், 16 மீட்டருக்குக் கீழ் தங்கம் கிடைத்ததாகவும், ஆய்வின்போது கிடைத்த பொருள்கள் கலிஃபோர்னியாவுக்கு கார்பண்டேட்டிங் அனுப்பப்பட இருப்பதாகவும் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், முதலாம் கட்ட ஆய்வின்போது, முதன்மை அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்க வேண்டாம். ஒருவேளை மத்திய அரசு அறிக்கை கேட்டால், தமிழக தொல்லியல் துறையில் அனுமதி பெற்றுத்தான் அறிக்கையை  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க