வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (12/10/2018)

கடைசி தொடர்பு:07:44 (12/10/2018)

ஆளில்லா விமானத்தை இயக்கிய அஜித்! - வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித், ஆளில்லா விமானத்தை இயக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

அஜித்குமார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிக்கல் மாணவர்கள், ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய 'தக்‌ஷா' என்னும் குழுவை உருவாக்கினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் இக்குழு பங்குபெற்றுவருகிறது.அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்டில் நடக்கும் யூ.ஏ.வி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச்     2018-ல் பங்கேற்க தங்களைத் தயார் செய்யத் தொடங்கினர். தக்‌ஷா குழுவின் ஆலோசகராக  நடிகர் அஜித் குமார் நியமிக்கப்பட்டார்.  நடிப்பையும் தாண்டி கார் ரேஸ், ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்வது உள்ளிட்டவற்றில் அவருக்கு இருந்த அதீத ஆர்வமே இதற்குக் காரணம். அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணி, அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்தது.

அஜித்

ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தக்‌ஷா அணி உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 11 குழுக்கள் தேர்வாகின. அஜித் மேற்பார்வையில் தக்‌ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம், அதிக நேரம் வானில் பறந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இந்நிலையில், தக்‌ஷா குழுவோடு அஜித் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. மேலும், அணியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் பரவி வருகிறது.