`வெள்ளிக்கிழமை அதுவுமா பசு மாடுகள் திருடு போயிடுச்சே!’ - அப்செட்டில் விஜயகாந்த் குடும்பம் | vijayakanth family upset over Missing cows

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (12/10/2018)

கடைசி தொடர்பு:11:50 (12/10/2018)

`வெள்ளிக்கிழமை அதுவுமா பசு மாடுகள் திருடு போயிடுச்சே!’ - அப்செட்டில் விஜயகாந்த் குடும்பம்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டில் இருந்து 2 பசுமாடுகள் திருடு போயுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

விஜயகாந்த்
 

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார். மேலும், காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றையும் கட்டிவருகிறார்.  அந்த வீட்டின் முன்பு கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு பசு மாடுகளை நேற்றிரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். வீட்டின் காவலர்கள், மாடுகள் காணாமல் போனதை விஜயகாந்த் வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் மாடுகள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.

வெள்ளிக்கிழமையும் அதுவுமா புதுவீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த பசு மாடுகள் திருடுபோனதாக விஜயகாந்த் குடும்பத்தினர் அப்செட்டில் இருப்பதாக, அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க