வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:10 (12/10/2018)

சென்னையில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் புதிய ஃபவுன்ட்ரி!

டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கமான சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் (Sundaram-Clayton Ltd.) நிறுவனம், சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் புதிய ஃபவுன்ட்ரியை (வார்ப்பகம்)த் தொடங்கியுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி. & சி.இ.ஓ. யங் கீ கூ இந்த ஃபவுன்ட்ரியைத் தொடங்கிவைத்தார். இந்த ஆலை, ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத் துறையில் அதன் உற்பத்திப் பொருள்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்வதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமெனக் கூறப்படுகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தேவைகளை இந்த வார்ப்பகம் பூர்த்திசெய்யும் என்றும், 8000 டன் உற்பத்தித்திறன் கொண்ட இந்த ஆலையில், 1.9 கிலோகிராம் எடை முதல் 7.2 கிலோ கிராம் எடை கொண்ட இயந்திர வார்ப்புகளை (machined castings) உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

சுந்தரம் கிளேட்டன்

சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் லஷ்மி வேணு கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் விதமாக, அவர்களோடு இணைந்து பணிபுரியத் தீர்மானித்துள்ளோம். அதன்படி எங்களுடைய புதிய ஃபவுன்ட்ரி, அவர்களது தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்திருப்பதால், தயாரிப்புகளை விநியோகம் செய்யும் நேரம் குறையும். தேவைப்படும் பாகங்களைத் தேவைப்படுகின்ற நேரத்தில் தயாரித்து விநியோகிப்பதை எங்களுடைய வாடிக்கையாளர்கள் விரும்புவதால், இந்த ஃபவுன்ட்ரி அதற்கு சாதகமாக இருக்கும்" என்றார்.