வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:30 (12/10/2018)

''கண் முன்னாடியே விட்டுட்டு போயிட்டார்''- கணவர் இறப்பால் கண்கலங்கும் வசுந்தரா

ழகுக்கலை நிபுணர் வசுந்தரா, எல்லோருக்குமே தெரிந்த முகம். சென்ற மாதம் இதே நாள், இவரின் கணவர் 57-வது வயதில் இயற்கை எய்திவிட்டார். ஒரு மாதமாகச் சோர்ந்துபோயிருந்த வசுந்தராவிடம் இன்று பேசினோம். 

குடும்பத்துடன் வசுந்தரா

''போன மாசம் செப்டம்பர் 12-ம் தேதிதான் அவர் எங்களை விட்டுட்டு போன நாள். போன வருஷம் நவம்பரில்தான் அவருக்கு நுரையீரலில் கேன்சர் இருக்கிறதே தெரிஞ்சது. முற்றிய நிலைமையில்தான் கண்டுபிடிச்சோம். டிசம்பரில் எங்க பொண்ணு மோனிஷாவுக்குக் கல்யாணம். அவசர அவசரமாக சிகிச்சை எடுத்துக்க ஆரம்பிச்சார். 'கீமோதெரபி பண்ணின உடம்புடன் கல்யாண வேலைகளை செய்யக் கூடாது'னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா, 'என் மகள் கல்யாணத்துக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். அந்த விசேஷத்துக்கு வேலை பார்க்கலைன்னா எப்படி'னு சொல்லிவிட்டு, மகளுடனே இருந்தார்.

மகளுடைய திருமணத்தின்போது

கீமோதெரபி, ரேடியேஷன் எல்லாம் கொடுத்து முடிச்சதும், 'இனி ஒண்ணும் பிரச்னையில்லை'னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனால், 40 நாளைக்கு முன்னாடி திடீர்னு உடம்பு முடியலைனு டாக்டர்கிட்டே போய் செக் பண்ணினோம். நுரையீரல் தாண்டி, மூளை, லிவர் என கேன்சர் பரவிட்டதா சொன்னாங்க. மறுபடியும் கீமோதெரபி, ரேடியேஷன் கொடுத்தோம். அவரால் சிகிச்சையைத் தாங்கமுடியலை. என்னவோ பண்ணுதுனு சொல்லிட்டே இருந்தவர், பத்தே நிமிஷத்தில் என் கண் முன்னாடியே எங்களை விட்டுட்டுப் போயிட்டார்'' என்ற வசுந்தரா, தேம்ப ஆரம்பித்தார்.

மீண்டு வாருங்கள் தோழியே!