வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:19:10 (12/10/2018)

ரவிச்சந்திரன் பரோல் கோரிய மனுவில் தமிழக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் நீண்ட கால பரோல் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விசாரணையில் தமிழக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு .

ரவிச்சந்திரன்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன், சொத்து விவகாரம் தொடர்பாக தீர்வு காண ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்திருந்தார் அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குறிப்பிட்ட நிபந்தனைகள் அளித்து பாரோல் அளித்தது நீதிமன்றம். இந்த நிலையில், தமிழக கவர்னர் முடிவு எடுக்கும் வரையில் அல்லது தம்மை குறிப்பிட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்யும் வரை நீண்ட கால பரோல் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் - என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக சிறைத்துறை 25.10.18 அன்று பதிலளிக்கவும் வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கே ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.