வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (12/10/2018)

கடைசி தொடர்பு:19:31 (12/10/2018)

``ஐ.ஏ.எஸ் கனவோடு கிராமத்திலிருக்கும் அனைவருக்கும் பேரிழப்பு'' - சங்கர் பற்றி நடிகர் சிவகுமார்

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி நிறுவனர் சங்கரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கரைப் பற்றியும் அவருக்கும் தனக்குமான உறவு பற்றியும் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சிவகுமார்.   

சிவகுமார்


``கிராமத்துல விவசாயக் குடும்பத்துல பிறந்தவர் சங்கர். சின்ன வயசிலேயே அப்பாவை இறந்துட்டார். விவசாயம் படிச்சுட்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகத் தீவிரமா படிச்சிட்டு இருந்தார். அஞ்சு முறை முயற்சி செஞ்சும் சக்சஸ் ஆக முடியலை. வயது வரம்பை மீறிடுச்சு. நமக்குதான் ஆசைப்பட்டது நடக்கலை. ஐ.ஏ.எஸ் கனவுகளோட இருக்கிற மத்தவங்களுடைய ஆசையை நிறைவேத்தணும்னுதான் இந்த அகாடமியை ஆரம்பிச்சார். இந்த அகாடமி ஆரம்பிக்க அவருடைய காதல் மனைவி வைஷ்ணவி முக்கிய காரணம். இதுவரைக்கும் இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட துறைகளுக்கு 750 பேரை தயார் செஞ்சு அனுப்பியிருக்கார். கிராமப்புறங்கள்ல இருந்து ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நான், 'சக்தி மசாலா' துரைசாமினு நாங்க நாலஞ்சு பேர் சேர்ந்து 'சிகரம் ஐ.ஏ.எஸ் அகாடமி' ஆரம்பிச்சோம். அதில நல்லா பெர்ஃபார்ம் பண்ண 100 பேரை, தன் அகாடமிக்குக் கூட்டிட்டுப் போய் அவங்களை இன்னும் மெருகேற்றினார். அதுல இப்போ ஏழு பேர் மெயின் தேர்வுக்குத் தயாரா இருக்காங்க. பணிச் சுமை காரணத்துனாலதான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். அவர் தூங்குற நேரமே ரொம்பக் குறைவு. அவர் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனு தெரியலை. சிஷ்யா ஸ்கூலுக்கு எதிர்ல அவருடைய ஓர் அகாடமியை நான்தான் திறந்து வெச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி முதன்முதல்ல என்னை பார்க்க மனைவியோடு வீட்டுக்கு வந்தார். அந்த நிகழ்வு இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு. சங்கருடைய இறப்பு கிராமங்கள்ல ஐ.ஏ.எஸ் கனவோட இருக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு" என்றார் மிகுந்த வருத்தத்துடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க