வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:20:25 (12/10/2018)

``ஐ.ஏ.எஸ். அகடமி சங்கருக்கு சினிமா தயாரிக்கணும்னு அவ்வளவு ஆசை!" - ராஜுமுருகன்

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி நிறுவனர் சங்கரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கரைப் பற்றியும் அவருக்கும் தனக்குமான உறவு பற்றியும் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் ராஜுமுருகன்.  

ராஜு முருகன்


``நான் டெல்லியில இருக்கேன். இன்னைக்கு காலையில போன்ல பார்த்துதான் சங்கர் இறந்த தகவல் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. இப்போவரை என்னால நம்ப முடியலை. ஏழு வருஷத்துக்கு முன்னாடி என் நண்பர் சரண் மூலமாதான் சங்கர் எனக்கு அறிமுகம். ஒரு நாள் அவரை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தார். அன்னைக்கு நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். நல்ல கிரியேட்டிவான நபர். சினிமா மேல அதீத ஆர்வம் அவருக்கு இருந்தது. ஒரு படத்தைத் தயாரிக்கணும்னு ஆசைனு என்கிட்ட அடிக்கடி சொல்வார். அவருடைய அப்பா பத்தி ஒரு கதை வெச்சிருக்கேன். அதை யார்கிட்டேயாவது கொடுத்து டைரக்ட் பண்ண சொல்லி நான் தயாரிக்கணும்னு சொல்வார். ரொம்ப உணர்வுபூர்வமான நபர். நிறைய அரசியல் பேசியிருக்கோம். நடிக்கிறதுல ஆர்வம் அதிகம். சும்மா எதோ ஒரு வசனம் பேசிட்டு போகாமல், பாசிட்டிவான விஷயத்தைப் பேசணும்னு நினைப்பார். படம் தயாரிக்கிறதுல நிறைய சிரமங்கள் இருக்கு. கஷ்டப்பட்டு இந்தளவு உயர்ந்திருக்கீங்க. அதனால, பண விஷயத்துல ரொம்பக் கவனமா டீல் பண்ணணும்னு அவர்கிட்ட சொல்லுவேன். அவரும் அதுல ரொம்ப கவனமா இருந்தார். என் படம் சம்பந்தமா எந்தச் செய்தி கேள்விப்பட்டாலும் உடனே போன் பண்ணி பேசுவார். ரொம்ப தன்னம்பிக்கை உடைய நபர். அவர்கூட ஓர் அஞ்சு நிமிஷம் பேசுனா நமக்கும் தன்னம்பிக்கை வந்திடும். அவர் எப்படி இப்படி முடிவெடுத்தார்னுதான் நம்பவே முடியலை" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க