வெளியிடப்பட்ட நேரம்: 03:03 (13/10/2018)

கடைசி தொடர்பு:03:03 (13/10/2018)

ஸ்டெர்லைட் ஆலை மூடல்; தூத்துக்குடி துறைமுக வருவாய் குறையும் எனத் தகவல்

``தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு இறக்குமதி சுங்கத்துறையின் மொத்த வருமானத்தில் 27 சதவிகிதம் ஸ்டெர்லைட் ஆலை மூலம் கிடைக்கப்பெற்று வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், சுமார் ரூ.1,400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” எனத் தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

`தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு இறக்குமதி சுங்கத்துறையின் மொத்த வருமானத்தில் 27 சதவிகிதம் ஸ்டெர்லைட் ஆலை மூலம் கிடைக்கப்பெற்று வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், சுமார் ரூ.1,400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” எனத் தூத்துக்குடி சுங்கத்துறைத் தலைமை ஆணையர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட்  தொடர்பாக பேசிய அதிகாரி

வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சுங்கத்துறை மற்றும் சரக்கு கையாளுனர்கள் நிறுவனங்கள் இணைந்து 2016-ம் ஆண்டில், மின்னனுத் தரவு பரிமாற்றத்தைத் தொடங்கியது. இந்த மின்னனு தரவு பரிமாற்றத்தின் மூலம் சரக்குப் பெட்டகங்களிலிருந்து செல்லும் சரக்குகள் எங்கு செல்கிறது, தற்போது செல்லும் வழித்தடம்,  துறைமுகத்தை வந்தடையும் நேரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. தற்போது அதனுடன் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால்,  ஏற்றுமதியாளர்கள் மிகவும் பயனடைவர். இதற்கான சாதனை விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் துறைமுக சபை துணைத் தலைவர் வையாபுரி, மண்டலத் தலைமை சுங்கத்துறை ஆணையர் ரஞ்சன்குமார் செளவுத்ரி, தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் திவாகர், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் இந்திய தொழில் வர்த்த சங்கத்தினர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துறைமுக துணைத் தலைவர் வையாபுரி பேசுகையில், “துறைமுக கொள்கலம் இயக்கங்களை தானியங்கு வகைப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தப்படும் மென்பொருள்தான் “கோடெக்ஸ்”. இந்தியாவில் முதல் முறையாகத் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்தான் இது அறிமுகப் படுத்தப்பட்டது.  இதுநாள் வரை ஐ.ஜி.எஸ்.டி ரீபண்ட் என்பது, இந்த மென்பொருள் செயல்படுத்தபட்ட பின்னர் வேலைச்சுமை, காகிதச் சான்று, தடைகள் போன்ற பலவித தொல்லைகளைத் தாண்டி மிகவும் எளிதாகக் குறுகிய காலத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்குப் பெரிய பிரச்னையாக இருந்த ஐ.ஜி.எஸ்.டி டீ பண்ட் தொல்லைக்கு எளிய தீர்வாகவும் அமைந்தது.

சுங்கத் துறை  ஆணையர்  திவாகர்

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குப் பெட்கத்தின் கையாளுகைத் திறன் அதிகரித்து வருவதால், துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, இன்னும் அதிமான சரக்குகளைக் கையாளும் வகையில் தற்போதுள்ள 13.5 மீட்டர் ஆழத்தை, 15.50 மீட்டர் ஆழமாகவும்  துறைமுக நுழைவாயிலை 16.50 மீட்டர் நீளம் ஆழப்படுத்தும் பணி வரும் கடந்த 18-ம் தேதி தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்தில் 9,600 சரக்குப் பெட்டகங்கள் கொண்ட பெரிய “பனமாக்ஸ் வகை கப்பல்கள்” வந்து செல்ல முடியும். அதேபோல்,  இரண்டாவது கட்டமாக 16 மீட்டர்  ஆழம் கொண்ட மிதவைக் கப்பல்கள், பொது சரக்குகப்பல்கள் வருவதற்கு ஏதுவாக உள்துறைமுகத்தின் மிதவை ஆழம்  18  மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. 

துறைமுகத்தின் நுழைவாயிலும், 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இப்பணி, வரும் 2021-ல் முடிவடையும். இதன் மூலம் பெரிய சரக்கு கப்பல்கள் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை கையாள முடியும் என்றார். இவரைத்தொடர்ந்து பேசிய தூத்துக்குடி சுங்கத்துறை  ஆணையர்  திவாகர்,  “வ.உ.சிதம்பரனார் துறைமுகம்  கடந்த 2017-18-ம் நிதியாண்டில், ரூ. 4,400 கோடி வருமானம் ஈட்டியது. தற்போதைய நிதியாண்டில் இந்த வருவாய் குறைய வாய்ப்புள்ளது. துறைமுகத்துக்கு இறக்குமதி சுங்கத்துறையின் மொத்த வருமானத்தில்  27 சதவிகிதம் ஸ்டெர்லைட் ஆலை மூலம்  கிடைக்கப்பெற்று வந்தது.  தற்போது ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், சுமார் ரூ.1,400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க