வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:06:00 (13/10/2018)

குமரி தாமிரபரணி ஆற்றில் மஹா புஷ்கர விழா தொடங்கியது!

திருநெல்வேலியை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா இன்று தொடங்கியது.

தாமிரபரணி

144 ஆண்டுகளுக்கு பின், விருச்சிக ராசியில் குரு பெயர்ச்சியடைவதை  முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி ஆகி, குழித்துறை வழியாக ஓடி, தேங்காப்பட்டணத்தில் கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் இன்று மகாபுஷ்கர விழா தொடங்கியது. திக்குறிச்சி மஹாதேவர் ஆலய படித்துறையில் நடந்த மகா புஷ்கரணி புனித நீராடலை வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சைதன்யானந்தஜி மகராஜ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தமிழகம் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் புனிதநீராடினர்.  இதில் தாமிரபரணி ஆற்றிற்கு ஆரத்தி உள்ளிட்ட சிறபு பூஜைகள் செய்யப்பட்டன. வரும் 22 தேதி வரை நடக்கும் இந்த விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். தினமும் யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.