வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:08:00 (13/10/2018)

காரைக்குடி அருகே போலீசாரைக் கண்டித்து செல்போன் டவரில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

மதுஅருந்திவிட்டு போதையில் வந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் மறித்து, சாவியை பறித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் இளைஞர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி-கோவிலூர் சோதனை சாவடியிலிருந்த போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, சின்ராஜ் என்பவர் குடிபோதையில், இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார். அவரது வண்டி சாவியை பிடுங்கிய போலீசார், பைக்குக்கான உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்ராஜ், சோதனை சாவடி அருகே இருந்த செல்போன் டவர் மீது ஏறி காவல்துறையை கண்டித்து தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இநத தகவல் அருகில் உள்ள கோவிலூர் கிராம மக்களுக்கு காட்டு தீ போல் பரவியது. அங்கே பொதுமக்கள் கூட்டம் கூடியது.உடனே அவரிடம் காவல்துறையினர் வழக்கு எதுவும் பதியாமல் அனுப்புவதாக கூறி, சமாதானம் செய்து கீழே இறங்கி வர வைத்தனர். குடிபோதையில் இருந்ததால் காவல்துறையினர் சின்ராஜ்யை எச்சரிக்கை செய்து  அனுப்பி வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க