வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (13/10/2018)

கடைசி தொடர்பு:11:43 (13/10/2018)

யாருடன் கூட்டணி வைப்பீர்கள்? - பொதுமக்கள் கேள்விக்கு கமலின் அதிரடி பதில்!

``எதிர்வரும் தேர்தல்களில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்'' என மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன்

பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டதால், மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார், அதன் தலைவர் கமல்ஹாசன். அதன்படி, தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவுசெய்வது, கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது, நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எனப் பிஸியாகவே இருக்கிறார். அதேநேரம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட விவகாரங்களிலும் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். இந்நிலையில், சேலத்தில் நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியிக்ல் கமல் பங்கேற்றார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த விழாவில் அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. தி.மு.க கூட்டணிகுறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், ``மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் முதல் தேர்தல் எதுவாக இருந்தாலும், அ.தி.மு.க, தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது.  எதிர்வரும் தேர்தல்களில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்" எனத் தெரிவித்தார். 

அதேபோல, காங்கிரஸ் கூட்டணிகுறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது, ``காங்கிரஸுடன் கூட்டணி அமையுமா என்று தெரியவில்லை. அவர்களுடன் பேசிப் பார்க்க வேண்டும். அவர்களுடனான கூட்டணி தமிழகத்துக்கு ஒத்துவருமா எனப் பார்க்க வேண்டும்.  இதுவரை தமிழக மக்களுக்கு காங்கிரஸ் குறைவாகவே நல்லது செய்துள்ளது. இதனால், தமிழக மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்ற கேட்ட பிறகே அவர்களுடன் கூட்டணி அமைப்பேன்" என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க