வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:02:19 (14/10/2018)

ஈர நெஞ்சத்தால் மீட்டெடுக்கப்பட்ட மனிதர்!- குடும்பத்துடன் சேர்த்து வைக்க கோரிக்கை

கோவையில் பரபரப்பான மேட்டுப்பாளையம் சாலையில், ஒருவர் முகத்தை மறைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார், அந்த சாலையில் சென்றுவரும் அநேகம் பேர் அவரை பார்த்து கண்டுக்காமல் செல்வர். அழுக்கு  உடை, துர்நாற்றம் கொண்ட  அவர் அருகில் வந்தால் மக்கள் தலை தெறித்து ஓடுவார்கள். கொட்டும் மழையானாலும் சரி, வெயிலானாலும் சளைக்காமல் நின்று கொண்டே இருக்கும் அவரது முகத்தை நேற்று வரை யாரும் பார்த்தது இல்லை.

குமரேசன்

இந்நிலையில், ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை அவரை மீட்டு, தங்களது  காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு, தேவையான முதலுதவி மேற்கொண்டு, அவரிடம் விசாரித்ததில் அவர் பெயர் குமரேசன். வயது சுமார் 45  பார்வை இல்லை.  நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் .படிப்பு இல்லை, வழி தவறி வந்தவருக்கு வழி காட்ட யாரும்  இல்லாததால், இந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. அவரது தந்தைப் பெயர் வி.பி.சீனு, தாய் பெயர் பாப்பா, தாய் மாமன் பெயர் பிச்சை, சித்ரா, செல்வி என்று இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். சரவணன் என்று ஒரு சகோதரரும் இருக்கின்றார். மேலும், சேலத்தில் முரளி என்று ஒரு உறவினரும் இருக்கின்றார். நாமக்கலில் இவர்களுக்குச் சொந்தமாக  ஓர் பழக்கடை இயங்கி வருகிறது.

குமரேசன், தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் பராமரிப்பில் உள்ளார். தன்னைத் தன் குடும்பத்துடன் சேர்த்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார், குமரேசனின் குடும்பம் குறித்து தெரியவந்தால் 90801 31500 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.