வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:02:06 (14/10/2018)

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கடையில் தீ விபத்து!

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் கடை ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். 

தீ விபத்து

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளுக்கான ஷோரூம் உள்ளது. இதில் நேற்று இரவு  இரவு 11:45 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, மைலாப்பூர் ஆகிய தீயணைப்பு வாகனங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி நீரை பாய்ச்சி அடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்து

இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக கடையிலிருந்த லட்சகணக்கான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. மேலும், கடையில் ஆள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரதாப் சிங் என்பவரது மகனுக்கு சொந்தமான கடை என்பது குறிப்பிடத்தக்கது.