வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:04:00 (14/10/2018)

கடலூரில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை! - ரூ26.5 லட்சத்தில் உபகரணங்களை வழங்கிய எஸ்.பி

கடலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரூ 26 லட்சத்து 77 ஆயிரத்து 500 மதிப்பில் உபகரணங்களை வழங்கியுள்ளார். 

 கடலூர்

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில்  நடந்த நிகழ்ச்சியில், வளைவு இடங்களில் இரவில் ஒளிரும் சோலார் பிரதிபலிபான்கள், சாலை வேகத் தடுப்பு கட்டை, போக்குவரத்து கூம்பு, வாகன தணிக்கை மேற்கொள்ளக் காவல் வாகனத்திற்குக்கோல் விளக்கு போன்ற உபகரணங்களை வழங்கினார். மேலும் தொடர்ந்து வெள்ளை பிரதிபலிப்பான் ஆடை, ஆரஞ்சு பிரதிபலிப்பான் ஆடை, வெள்ளை, ஆரஞ்சு கையூரை,  மூக்கு முக மூடி, விபத்து மற்றும் சாலை பழுதைச் சுட்டி காட்டக் காந்த கோள் விளக்கு, ஒலி பெருக்கி, தேடுதல் விளக்கு, டார்ச் லைட் போன்ற உபகரணங்களைக் 46 காவல் நிலையங்களுக்கும், 13 நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களுக்கும், 4 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கும், 7 அதிரடிப்படை வாகனங்களுக்கும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் வழங்கினார்.