வெளியிடப்பட்ட நேரம்: 05:01 (14/10/2018)

கடைசி தொடர்பு:05:01 (14/10/2018)

சுகாதாரத்துறை செயலர் முன் தள்ளுவண்டியில் படுக்கவைக்கப்பட்ட மூதாட்டி - காரைக்குடியில் நடந்த அவலம்!

காரைக்குடி அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வின்போது கடும் காய்ச்சலால் அவதிபட்ட மூதாட்டியை தள்ளுவண்டியில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் மருத்துவமனையில் பேரிடர் மேலாண்மை வார்டு, முதியோர்களுக்கான வார்டு குழந்தைகளுக்கான  சிறப்பு சிகிச்சைபிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சி.டி.ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவு ஆகியவைகளை பார்வையிட்டு போதுமான வசதிகள் உள்ளதா என்றும், அவை சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ 4கோடி மதிப்பில் புதியதாக கட்டப்படுவரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். செயலருடன் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவதுறை இணைஇயக்குநர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.யசோதாமனி உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ``வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மேலே குறிப்பிட்ட நோய்களின் தாக்கல் இல்லை; இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்கடி ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சுகாராத்தறை துனை இயக்கனர் ஆகியோர் இணைந்து பல்வெறுதடுப்பு நடவடிக்கைகைளை எடுத்து வருகின்றனர். சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தற்போது ரூ87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவும் இன்னும் 2 மாதத்தில் செயல்படும்'' என்றார். முன்னதாக அவர் ஆய்வு நடத்தும்போது, கடும் காய்ச்சலுக்காக வந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்காமல் கைவண்டியில் படுக்கவைத்த அவலமும் அரங்கேறியது. இதற்கு பா.ம.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் செயலரிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க