‘காங்கிரஸ் கூட்டத்தில் நாற்காலிக்கு சண்டை!’ - கடுப்பான சஞ்சய் தத் | Sanjay dutt Upset in Nagercoil Congress meeting

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (14/10/2018)

கடைசி தொடர்பு:13:36 (14/10/2018)

‘காங்கிரஸ் கூட்டத்தில் நாற்காலிக்கு சண்டை!’ - கடுப்பான சஞ்சய் தத்

நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்ட மேடையில்அமர நிர்வாகிகள் முண்டியடித்ததால் கோபமான தேசிய செயலாளர் சஞ்சய் தத் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இக்கூட்டத்தை நடத்துவதற்காக தேசிய செயலாளர் சஞ்சய் தத் வந்திருந்தார். இன்று காலை 11 மணிக்கு மேடைக்கு வந்துவிட்டார் சஞ்சய்தத். மேடையில் அவர் அமர்ந்ததும் வட்டாரம், நகரம், அணி பொறுப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். மேடையில் நெரிசல் அதிகமானதால் கோபமான சஞ்சய் தத் மேடையை விட்டு கீழே இறங்கி பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார். பின்னர் யார் யார் மேடையில் அமர வேண்டும் என பெரிய பட்டிமன்றமே நடந்தது. இறுதியில் சஞ்சய் தத் ஒரு பெயர் பட்டியலை கொடுத்து அவர்கள் மட்டும் மேடையில் அமர்ந்தால் போதும் என கூறினார். அதன்படி குறிப்பிட்ட தலைவர்கள் மட்டும் மேடையில் அமர்ந்த பிறகு சஞ்சய் தத் மேடையில் வந்து அமர்ந்தார். அதன்பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது.