Published:Updated:

`இலங்கையில் கடல்நீர் உள்வாங்கியது சவாலாக இருந்தது!' - 56 கி.மீ நீந்தி 14 வயது சிறுவன் உலக சாதனை

தேசிய கொடியுடன் கடலில் இருந்து வெளியே வந்த சினேகன்

தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை சென்று திரும்பி, பாக் நீரிணை (Palk Strait) பகுதியில் 56 கிலோ மீட்டர் தூரத்தை 19.45 மணிநேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சினேகனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

`இலங்கையில் கடல்நீர் உள்வாங்கியது சவாலாக இருந்தது!' - 56 கி.மீ நீந்தி 14 வயது சிறுவன் உலக சாதனை

தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை சென்று திரும்பி, பாக் நீரிணை (Palk Strait) பகுதியில் 56 கிலோ மீட்டர் தூரத்தை 19.45 மணிநேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சினேகனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Published:Updated:
தேசிய கொடியுடன் கடலில் இருந்து வெளியே வந்த சினேகன்

தேனி மாவட்டத்தை சேர்ந்த நீதிராஜன் - அனுசா தம்பதியின் மகன் சினேகன் (14). எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார். நீச்சலில் மிகுந்த ஆர்வமுடைய சினேகன் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் நீச்சல் போட்டியில் 5 கிலோ மீட்டர் தூரத்தை விரைவாக நீந்திக் கடந்து தங்கப்பதக்கம் பெற்றார். அதேபோல் தேசிய அளவிலான ஓபன் வாட்டர் நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியா இலங்கை பாக் நீரிணை (Palk Strait) பகுதியான தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் தொடர்ந்து நீச்சல் அடித்து உலக சாதனை படைக்க முடிவு செய்தார்.

கடலில் நீந்தி வரும் சிறுவன் சினேகன்
கடலில் நீந்தி வரும் சிறுவன் சினேகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை, தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான 28 கிலோ மீட்டர் தூரத்தை இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் நீந்தி சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த அனைவருமே இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்தி தனுஷ்கோடி வருவதும், அல்லது தனுஷ்கோடியில் இருந்து குதித்து தலைமன்னார் வரையிலும் நீந்திச் செல்வதும் வழக்கம்.

ஆனால் புதிய முயற்சியாக சிறுவன் சினேகன், தனுஷ்கோடியில் இருந்து 28-ம் தேதி மதியம் 2 மணிக்கு இலங்கை தலைமன்னாருக்கு நீந்தத் தொடங்கினார். இரவு 9.55 மணிக்குத் தலைமன்னார் சென்றடைந்தார். 7.55 மணிநேரத்தில் 28 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இதற்கு முன்பு செய்தவர்களின் சாதனையை முறியடித்தார்.

பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்குக் கடலில் குதித்து நீந்தத் தொடங்கி நேற்று காலை 9.42 மணிக்கு தனுஷ்கோடிக்கு வந்தடைந்தார். சுமார் 19.45 மணி நேரத்தில் 56 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி உலக சாதனை படைத்த சினேகனுக்கு இந்தியக் கடலோரக் காவல்படையினர் முதல் பொதுமக்கள் வரை சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த சுஜேத்தா என்ற பெண் இதேபோல் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சென்றுவிட்டு, மீண்டும் அங்கே இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்தபோது ஜெல்லி மீன்கள் கடித்ததால் அவரால் தொடர்ந்து நீந்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தற்போது தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சினேகன் இந்த சாதனையை முதன்முறையாக நிகழ்த்திக்காட்டி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்‌.

சிறுவன் சினேகனிடம் பேசினோம். ``நான் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். இதற்கு முன்பு கோவாவில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். ஆனால் இந்த இந்தியா - இலங்கை கடலில் நீந்தியது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. தமிழகத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு வேகமாக நீந்திச் சென்றுவிட்டேன்.

சாதனை படைத்த சிறுவனை வாழ்த்திய  அதிகாரிகள்
சாதனை படைத்த சிறுவனை வாழ்த்திய அதிகாரிகள்

ஆனால் அங்கிருந்து நீந்தி வந்தபோது கடல் நீர் உள்வாங்கியதால் நீந்துவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இங்கு ஜெல்லி மீன்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும் எனக் கூறியிருந்தார்கள். அதனால் சற்று பயமாக இருந்தது. இருந்தும் விடாமுயற்சியுடன் நீந்தி வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். ஒரு நாளைக்கு 5 முதல் 8 மணி நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்தேன்‌. அந்தப் பயிற்சிதான் தற்போது எனது இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்தது'' எனத் தெரிவித்தார்.

சிறுவன் சினேகனுடன் தமிழ்நாடு விளையாட்டு ஆணைய தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், நீச்சல் பயிற்சிக் குழுவினர் மற்றும் சென்னையில் உள்ள தமிழக அரசின் விளையாட்டுத்துறை நீச்சல் பயிற்சியாளர் லோகநாதன் நடுவராகச் சென்று சிறுவனின் சாதனையை ஆய்வு செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism