இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

தாராபுரம்: இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் வட்டம், மூலனூர் அடுத்த ஆயக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இவர் ஒசூரில் உள்ள ஒரு வட்டிக்கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3ஆம் தேதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு பெரும்பாலான மக்கள் வயல் வேலைகளுக்கு சென்று விடுவதால் பகலில் கிராமம் வெறிச்சோடி கிடக்கும்.

இந்த சமயத்தில் அருண்குமாரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 18 வயது இளம்பெண் தென்னங்கீற்றால் மறைக்கப்பட்ட குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அருண்குமார் தென்னங்கீற்றை விலக்கி, அனிதா குளிப்பதை அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்தார்.

நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அருண்குமாரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அழைப்பு மணி ஓசையை கேட்ட அனிதா உஷாராகி சத்தம் போட்டு, பார்த்த போது செல்போனுடன் அருண்குமார் ஓடுவது தெரிந்தது. இதை சற்றும் எதிர்பாராத அருண்குமார் மீண்டும் ஊருக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் நேற்று அருண்குமார், 'ஊர் மக்கள் இந்த சம்பவம் அனைத்தையும் மறந்து போயிருப்பர்' என்று நினைத்து ஊருக்கு வந்தார். ஏற்கனவே இந்த விஷயம் அறிந்த பொதுமக்கள் அவரை கையும், களவுமாக பிடித்து, மூலனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜி.பழனிச்சாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!