3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு? - வி.வி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை! | Income Tax raids at VV Minerals group

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (25/10/2018)

கடைசி தொடர்பு:09:30 (25/10/2018)

3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு? - வி.வி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை!

வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில், இன்று காலைமுதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

வி.வி மினரல்ஸ்

இந்தியாவில், அதிக தாதுமணல் ஏற்றுமதிசெய்யும் நிறுவனமாக வி.வி மினரல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் மேலும் உரிமையாளரின் சகோதருக்கு சொந்தமான பி.எம்.சி நிறுவனத்திலும் இன்று அதிகாலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். 

மூன்று வருடங்களாக வருமான வரி செலுத்தாததே இந்தச் சோதனைக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், சோதனை தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. சென்னை, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை, தூத்துக்குடி போன்ற 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்தச் சோதனையில், 500 -க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.