காவிரி: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

 புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வெளியிட்ட தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு சட்டபூர்வ அந்தஸ்து கிடைத்துள்ளது.

இருப்பினும், மத்திய அரசு இந்தத் தீர்ப்பை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மூலம் செயல்படுத்த வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தின் எதிர்ப்பு காரணமாக, உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி 2 முறை பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மேலும், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, குரியன் ஜோசப் ஆகியோர், இது குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!