நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணிக்கு வாய்ப்பு: அகிலேஷ் சொல்கிறார் | parliment Election, 3rd party, Uttar pradesh chief minister akhilesh yadav

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (22/04/2013)

கடைசி தொடர்பு:14:41 (22/04/2013)

நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணிக்கு வாய்ப்பு: அகிலேஷ் சொல்கிறார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணிக்கு வாய்ப்பு: அகிலேஷ் சொல்கிறார்

சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் 3வது அணிக்கு வாய்ப்பு உள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

மகாபலிபுரத்தில் வன்னியர்கள் கூடும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா வரும் 25ஆம் தேதி நடக்கிறது.

ஜெ.குரு எம்.எல்.ஏ. தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்சிங் யாதவ் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்த நிலையில் அவரது வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இன்று காலை சென்னை அகிலேஷ் யாதவ், வன்னியர் இளைஞர் பெருவிழாவை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ்,  நாடாளுமன்றத் தேர்தலில் 3வது அணிக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டன  என்று அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.

பொருளாதாரப் பிரச்னை, விலைவாசி உயர்வு, எல்லைத் தகராறைத் தீர்க்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

இளைஞர் சமுதாயத்தி்னரால் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று கூறிய அவர், தமிழகத்தில் பா.ம.க. இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும் அதனால்தான் அந்த கட்சியின் விழாவில் பங்கேற்க வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்