பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம்: தமிழகத்தில் 4 பேர் கைது

சென்னை: பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் நேற்று இரவு 11 மணி அளவில் 2 பேரை பெங்களூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் உதவியோடு அவர்கள் பிடிப்பட்டார்கள். அவர்கள் இருவரும் நெல்லை அருகே உள்ள மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர் பெயர் பீர்முகமது. இன்னொருவர் பெயர் பஷீர். அவர்கள் இருவரும் இரவோடு இரவாக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டதாக சென்னை போலீசார்  தெரிவித்தனர்.

இதனிடையே பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் கிச்சன் புகாரி என்பவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரசூல் மைதீன், முகமது சலீல், சலீம், ஆகியோரையும் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 வது நபரும் கைது

அத்துடன் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 வது நபரும் மதுரையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 பேருக்கு வலை வீச்சு

இதனிடையே இவ்விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களது வரைபடத்தை வைத்துக்கொண்டு அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!