பொறியியல் படிப்புகளுக்கு மே 4 முதல் விண்ணப்பம்!

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு வருகிற மே மாதம் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடித்து மே 3 ஆவது வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களை பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பும் பணிகளை அண்ணா பல்கலைக் கழகம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான பொறியியல் விண்ணப்பங்கள் மே 4-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார்.

விண்ணப்ப படிவங்கள் மே 20 ஆம்தேதி வரை வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கு மே 20 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெறும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!