வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)

கடைசி தொடர்பு:07:35 (30/10/2018)

பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு விசாரணை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது. அப்போது பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த பன்னீர் செல்வம் தரப்பின் 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. 'வழக்கை எதிர்கொள்வதற்குக் கால அவகாசம் வேண்டும். எனவே, வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்' என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இக்கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன், திட்டமிட்டபடி இவ்வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கின் நகர்வு மற்றும் தீர்ப்பானது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.