வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (30/10/2018)

கடைசி தொடர்பு:12:31 (30/10/2018)

புத்தக வடிவில் வீரயுக நாயகன் வேள்பாரி! - முன்பதிவுக்குச் சிறப்பு சலுகை

புத்தக வடிவில் வீரயுக நாயகன் வேள்பாரி!  - முன்பதிவுக்குச் சிறப்பு சலுகை

ரு வார இதழில் ஒரு தொடர்கதை எத்தனை வாரங்கள் வரும்... 25 அல்லது 50 வாரங்கள்..?! ஆனந்த விகடனில் எழுத்தாளர் சு.வெங்கடேசனின் `வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடர் 100 வாரத்தைக் கடந்து வெற்றிகரமாக வாசகர்களை ஈர்த்திருக்கிறது. இப்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கான வாசகர்கள் பாரியுடனும் பறம்பு நாட்டு மக்களுடனும் சேர்ந்து வாழ்வது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தச் சரித்திர நாவல். 

சேர, சோழ, பாண்டியன் என மூவேந்தர்களும் பறம்பு என்ற சின்ன நாட்டின் மீது போர்த் தொடுக்க என்ன காரணம், பாரி வள்ளல் எனத் தெரியும்; அதைத் தாண்டி அவன் சிறப்புகள் என்ன, பறம்பில் வாழ்வது அவ்வளவு பெரிய விஷயமா, வேள்பாரியை வாசித்தால்தான் அது புரியும். பாரியின் விஸ்வரூபம் தெரியும். 

 ``ஹாரிபாட்டர், கேம்ஸ் ஆஃப் த்ரோன்ஸ், பாகுபலியை எடுத்த இயக்குநர்கள் ஒன்று சேர்ந்தால்தான் சு.வெங்கடேசனின் வர்ணனைகளைக் காட்சிகளாக மாற்ற முடியும்!" என்கிறார் ஒரு வாசகர். 

 ``என் வாழ்க்கையின் சாதனையாக நான் கருதுவது வேள்பாரியை வாசித்ததுதான்!" என்கிறார் இன்னொருவர்.

வேள்பாரி பற்றி வாசகர்களின் எண்ணங்களைப் பார்க்க: https://www.youtube.com/playlist?list=PLiswlpSnFenGowPzWPbodURIwebpHxWYm

வேள்பாரி புத்தக முன்பதிவு ஆரம்பம்

ஒவ்வொருவாரமும் காத்திருந்து காத்திருந்து வாசித்தவர்கள் ஏராளம் என்றால், போரில் நடக்கும் அதிர்ச்சிகளைத் தாங்க முடியாமல் புத்தகமாக வரட்டுமெனக் காத்திருப்பவர்கள் அதனினும் அதிகம். அவர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் வேள்பாரி புத்தகமாக விரைவில் வரவிருக்கிறது. அதன் முன்பதிவு இப்போது தொடங்கியிருக்கிறது.

தொடருக்குத் தந்த அதே ஆதரவை வாசகர்கள் திரு.மணியம் செல்வம் அவர்களின் ஓவியங்களுக்கும் தந்திருக்கிறார்கள். அதனால் புத்தக வடிவில் வரும்போது அத்தனை ஓவியங்களையும் சேர்த்திருக்கிறோம். 1408 பக்கங்கள் என்பதால் இரண்டு புத்தகங்களாக வெளிவருகிறான் பாரி. ஹார்டு பவுண்ட் கவருடன் வரும் இதன் விலை 1,350 ரூபாய். 500 ரூபாய் தந்து டிமாண்ட் டிராஃப்ட் மூலம் முன்பதிவு செய்கிறவர்களுக்கு 999 மட்டுமே (தமிழகம், பாண்டிச்சேரிக்கு டெலிவரி இலவசம்). ஆன்லைனில் இன்றே புத்தகத்தை 999 ரூபாய்க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இணையம் மூலம் முன்பதிவு  செய்ய: http://books.vikatan.com/index.php?bid=2478

மற்ற அப்டேட்களுக்கு:

Facebook: https://www.facebook.com/groups/500337410392609/
Twitter:      https://twitter.com/Vikatanvelpari

தமிழின் மிக முக்கியமான சரித்திர நாவல் வேள்பாரி. இதைக் கொண்டாட உங்களை அன்போடு அழைக்கிறான் விகடன்!


டிரெண்டிங் @ விகடன்