வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (30/10/2018)

கடைசி தொடர்பு:12:57 (30/10/2018)

`தவறான பாதையில் சென்றதற்கு இதுதான் காரணம்!’ - நிர்மலா தேவி வாக்குமூலம்

நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான செயல்களுக்குத் தூண்டிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்குப்பின் நாள்தோறும் பல்வேறு செய்திகள் நிர்மலா தேவியைப் பற்றியும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் வெளியாகின. அதில் கல்லூரி விரிவுரையாளர்கள் முதல் பல முக்கிய பிரமுகர்கள் பெயர் வெளியானது.  `மாணவிகளை தவறான செயல்களுக்கு தான் அழைத்துச் சென்றதற்கு எது காரணம்'  என்பதை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் வாக்குமூலமாக அளித்திருக்கிறார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி. 

1996-ல் நிர்மலா தேவிக்கு திருமணம் ஆகியிருக்கிறது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தன் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனக்கு பலருடன் தொடர்பு இருந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார் நிர்மலா தேவி. மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் முருகன் என்பவருக்கும், இவருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பின்பு முருகன் இதுபோன்ற விஷயங்களுக்கு ஒத்துழைக்கும் கல்லூரி மாணவிகளை அழைத்து வருமாறு நிர்மலா தேவியிடம் கேட்டிருக்கிறார். அப்போது நிர்மலா தேவி பல கல்லூரி மாணவிகளிடம் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். இவ்வாறு தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். நிர்மலா தேவி பற்றி மேலும் செய்திகளைத் தெரிந்துகொள்ள https://www.vikatan.com/person/nirmala-devi